பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாருக்குப் புத்தி இல்லை? இத்தினி கூடப் புத்தி கிடையாது - துளி இத்தினி கூடப் புத்தி கிடையாது! ஆண் எனக்கா? பெண் உனக்கல்ல? ஆண் பின்னே யாருக்கு? பெண் என்னெப் பெத்து வளர்த்திட்ட அம்மா அப்பனுக்கு ஆண் பித்தம் பிடிச்சாப்போல் பேசுறாய் - நித்தம் பெத்தவங்க மேலே, என்னடி குத்தம்? பெண் : அதெக் கேக்கlங்களா? ஆண் : ஆமாண்டி சொல்லு. பெண் : மதுரை ஜில்லாக் கலெக்டர் சன் கிச்சுக்கும் முன்சீப்பு பிள்ளே பியே பிச்சுக்கும் - என்னை செல்லமய்யர் பேரன் குப்புக்கும் கேட்டாங்க! சேலம் வக்கீல் ராம சுப்புக்கும் கேட்டாங்க! வில்லிபுத்துராரு வீட்டுக்குங் கேட்டாங்க! வேம்பத்துரார் வந்து வெகுபாடு பட்டாங்க! அதுமட்டுமா? கொள்ளேகாலம் கோயமுத்தூர் சித்துராரும், கும்பகோணம் தஞ்சாவூராரும் கேட்டாங்க! உள்ளுருக்குங் கேட்டு ஊஹ9ண்ணு சொல்லிட்டு உனக்குத் தாரை வார்த்த எனைப் பெத்த பேருக்கு (இத்தினி) 184