பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் மயில்: நான் நெனைக்கிறமாதிரி எல்லாம் உனக்கு இருக்குது அயாம் டைரக்டர் - ஆக்டர் - அன் ப்ரொடியூசர் (நான்) ஆடும்மயில் அழகாய்ப் பாடுங்குயில் - உன் ஆசையினால் ஆனந்தமாய் நானே! (ஆடும்) வாடைதரும் தேன்மலரில் வண்டுறையும் சீராய் உன்னோடுறையும் கலா நிலா ஒவியம் பாராய்! (ஆடும்) லோட்டஸ் புஷ்பம் போலே உனது பேசு - இந்த லோகந்தன்னை வசியம் செய்யும் ஐசு! பாடுங்குயிலே ஆகும் உந்தன் வாய்சு பவளந்தன்னைக் கவனம் செய்யும் லிப்சு வயசு - சைசு - நைசு எல்லாம் பஸ்ட் கிளாசு - எங்கே இப்படிக் கொடு ஒரு போசு. மேவிய காதலை விழியாலே பேசி விலகாமல் சதா இன்பம் பெற யோசி - தினம் மேலான ராசி - உனை - விடமாட்டேன் நேசி - இனி மேதினிமேல் தாரா உந்தன் சரஸ் விலாசி (ஆடும்) நாகரிகக் கோமாளி: நாட்டுக்குச் சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானய்யா (நாட்டு) ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி - நல்ல அழகான ஜதையோடு வந்தாணய்யா! மோட்டாரை விட்டிறங்கி வந்தானய்யா! முன்குடுமி சீவிக்கிட்டு வந்தாணய்யா! ராட்டினம் போல் சுழன்று வந்தாணய்யா! - நம்ம ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்த்து வந்தானய்யா! தச்சோம் கிழிச்சோம் ஜரிகை வெண்பட்டு என்பட்டுக் கிழிஞ்சது போ!!! - நல்ல தம்பி 187