பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகப்பா! பொண்டாட்டி புருஷனுக்குப் பலமான சொந்தமே பிள்ளை குட்டியான பின்னே பிரியாத பந்தமே! படுபாவி பதந்தன்னில் பாம்பே கடிக்குமென்றே பழிதேடலானேனே பார்மீது நானே - ஐயோ ஓஓ... மங்கல மாங்கல்யம் மல்லிகைப்பூப் போச்சே மன்னவன் தன்னோடு வாழ்க்கையும் போச்சே நங்கையின் மேலன்பு நல்கிடும் நாகப்பா நாதனின் உயிர்மீள நீயன்றி யாரப்பா? மண்ணுலகில் ஊர்வனத்தை மிதித்தானே - எந்தன் மணிமுடிமீது காலில் உதைத்தானே - முன்னம் எங்கள் குட்டிகளை வதைத்தானே - அந்த முற்பழியும் பிற்பழியும் முடித்தேனே இவன் வாழமாட்டான் இனி மீளமாட்டான் விதி யாரைவிட்டது? விதி யாரை விட்டது? பகமாட்டுப் பால் கோழியண்டம் தாரேன் பலகார பட்சணங்கள் வேறுவேறு பண்டம் இசைபாடி பாதம் போற்றித் தண்டம் செய்வேன் இப்போதே தீர்க்கவேனும் என் நாதன் கண்டம். செத்தவன் பிழைத்தது. ஜெகத்து மீதிலே எப்பவும் கிடையாது தெய்வநீதி இதுசெய்வதேது இனி ஜீவனம் போனது போனதுதான் இவன் வாழமாட்டான் இனி மீளமாட்டான் விதி யாரைவிட்டது? விதி யாரை விட்டது? பத்தினி நானே என்பது எவரும் தெரியவே - இந்தப் பார்மேலே சுடும் அக்கினிபற்றி எரியவே - துஷ்டப் பாம்பு நீ அறியவே குற்றம் யாவும் ஒழியவே! 190