பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறவஞ்சியின் குறி பன்றிமலை பனிமாமலை பவழமலை பழனிமலை எங்கமலை குன்றோரமாய்க் குடிவாழுவோம் குறி செல்லுவோம். குறவர்குலம் எங்க குலம்! நன்றிகெட்ட ஜனங்கள் வாழும் நாகரீக நாட்டிலே ஒன்றுசேர முடியாதென ஒதுங்கினோம் மலைக்காட்டிலே! (பன்றி) தெந்தினனாதினனா தினாதெந்தி தினதெந்தினாதினனா - ஹை (பன்றி) செந்தினை மாவிடிப்போம் தேனெடுப்போம் தின்னத்தினம் படைப்போம் - ஹை சிறுத்தைப்புலி பிடிப்போம் தோலெடுப்போம் சிங்காரப் பாய்விரிப்போம் - ஹை (பன்றி) தொந்திக்கடவுள் தம்பி கந்தக் கடவுள் எங்கள் சொந்தக்கடவுளாகச் சிந்தைக்குள் குடிவைப்போம் (தொந்திக்) ஆட்டம் பார்த்து ஆளைப் பார்த்து நோட்டம் பாக்கும் ஐயாமாரே! வேட்டியை மறந்துடாதீங்க - மேலே போடும் (வேட்டியை) பாட்டைக்கேட்டு பல்லைக் காட்டி நோட்டம் பாக்கும் சிப்பாய்மாரே கோட்டையை உட்டுடாதீங்க - ஏ - ஐயாமாரே (கோட்டையை) வேடிக்கையா ஐயாக்கண்ணு வெளியே பாக்குது வேறெபக்கம் பெரிச்சாளி உள்ளே நுழையுது கண்ணடிச்சு ஐயா இங்கே பொண்ணெப் பாக்குது காரியமா வேறெடக்கம் கதையும் நடக்குது தோலிருக்கவே பழத்தில் களை மறைஞ்சுது! அதுபோல ஆளிருக்கவே வந்தவேலை முடிஞ்சுது - வர்றேன் - வனசுந்தரி 192