பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி தாசர்கள்! மாதவி வீடெண்ப திதுதானோ? மாலையிட்டாள் வீடு இதுதானோ? தாம்பூலம் தந்தாள் வீடு இதுதானோ? (மாதவி) வாங்க மதனாங்க வரவேணுங்க! நீங்க வந்து இந்த மஞ்சமீது உட்காருங்க! பாங்கிமார்களே பலகாரம் பண்ணுங்க - நீங்க பசும்பாலைக் காச்சுங்க டிக்காஷன் காப்பி போடுங்க போங்க! மலரும் வண்டென இருவரும் மருவும் சொந்தம் கொண்டிட மாதவியான பெண்மானே உன்மேல் காதல் கொண்டோடி வந்தேனே! மன மோகன ரதியே! எனதாருயிர் நிதியே! மண வாயிலடி வந்து மாலையிட்ட மயிலே! மாதவியான பெண்மானே! சத்தியம் செய்தால் நம்புவேன் இந்தத் தையலைப் பிரியே னென்று மெய்யாக மனமகிழ்ந்து (சத்தியம்) உத்தமி மாதவியே! உமை பரமேசன் உண்மையாகச் சொல்லு கிறேன் உனக்கு நான் தாசன் எத்தினமும் உன் மேல் விசுவாசன்! (மாதவி) - நீதிபதி