பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ {center|ஆளை ஆளைப் பார்க்கிறார்!}}


ஆளை ஆளைப் பாக்குறார்
ஆளை ஆளைப் பாக்குறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பாக்குறார்!



பாட்டினில் ராகம் தாளம்
கேட்க இங்கு யாரும் இல்லை;
நாட்டியம் என்றே சொன்னால்
கூட்டத்தில் குறைச்சலில்லை! (ஆளை)



சேட்டைகள் செய்துமே
காட்டுறார் தங்கப்பல்லை;
கல்யாண ஆசையாலே
கண்ணைக் கண்ணைக் காட்டுறார்! (ஆளை)



செந்தாழம் பூவைக் கண்டு
தீராத மோகம் கொண்டு
திண்டாட்டம் போடுகிறார்
நாற்காலி யோடுருண்டு
சொந்தங் கொண்டாட எண்ணிச்
சும்மா சும்மா பார்க்கிறார்! (ஆளை)



சிகரெட்டை ஊதித் தள்ளிச்
சேர்மீது துள்ளித் துள்ளிச்
சிநேகிதர் தம்மைக் கிள்ளிச்
சிரிக்கிறார். ஏதோ சொல்லி!
சிங்காரம் பண்ணுறார்
அங்கொரு ரொக்கப் புள்ளி
ஆட்டத்தைப் பார்த்திடாமல் (ஆளை)

-- ரத்தக்கண்ணீர்

194