பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரிக்குறவர் பாட்டு! சிங்கப்பூருக் காட்டுக்குள்ளே தேடிப்போனேனய்யா - நான் தேடிப்போனேனய்யா, சிறுத்தை போலே ஆளைப் பாத்துச் சீறிச்சு ஒரு மிய்யா! குழிதோண்டி மண்ணைப் பறிச்சி - ஏங் கோணிப்பையை விரிச்சி இப்படிக் குனிஞ்சு அப்படி வளைஞ்சு இப்படி அளிஞ்சு அப்புறம் ஒளிஞ்சு நாங், குப்புறப்போட்டு அமுக்கிப் புடிச்சுக் கொடைஞ்செடுத்த ஜவ்வாது ஜவ்வாது நாங், கொல்லிமலைக் காட்டுக்குள்ளே சுள்ளி பொறுக்கப் போனேன்; முள்ளாம் பன்னியைப் பாத்துக்கிட்டு மொறைச்சுது ஒருபூனே வாங் கோழிக்குடலு இறைச்சி - அதைக் குறுக்க மறுக்க எறைச்சி வாயை அடக்கிக் காலை மொடக்கி இப்படிக் குக்கி மேலே எக்கி ஏங் கூடையைப்போட்டு மூடிப்புடிச்சுத் தேடியெடுத்த ஜவ்வாது ஜவ்வாது இது கும்பகோணம் கடைத்தெருவில் கொழுத்த வெலைக்கு விக்கிறது; கொண்டுவந்து கொடுப்பதாலே கொறைஞ்ச வெலைக்கு விக்கிறது இது சங்கீதக்காரரெல்லாந் தடவிப் பாத்தது - கையாலே தடவிப் பாத்தது - இது தஞ்சாவூருக் காரரெல்லாஞ் சபாசுன்னுது. (சிங்கப்பூரு) 195