பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறையின் சிறப்புகள் ! சங்கர சங்கர சம்போ - இந்தச் சாமியார் விஷயத்தில் ஏனிந்த வம்போ? தாய் வயிற்றில் பத்துமாதம் - சிறை தானிருந்தவர்க்கு என்ன ப்ரமாதம் (சங்கர) கடன்காரர் காணாத இடமே - இது கடன்காரர் காணாத இடமே - மனதைக் கலக்கித் தெளிய வைக்கும் கம்பி சூழ் மடமே! (சங்கர) பேத மிங்கே கிடையாது - ஆள் பேத மிங்கே கிடையாது! - ஆசைப் பெண்ணென்னும் பேய் உன்னைப் பிடிச்சி ழுக்காது (சங்கர) - கிருஷ்ணபக்தி கனவிதுதான்! கனவிதுதான் நிஜமிதுதான்! உலகினிலே எனையார் சொல்லுவார். விதி யார் வெல்லுவார்? (கனவி) இள வயதின் நினைவினிலே ஏக்கமெனும் இருள் சூழ்ந்திடலாம் ஒளி மாய்ந்திடலாம் மனம் ஒரிடமும் உடல் வேறிடமும் - இரு கூறானதும் விதிவசமே சிறுபோதுடனே வாழும் நறுமணம் மலரானதும் வெகுதூரம் செல்வதுபோல் காதலின் தன்மை விலகிப் போவது உண்மை (கனவி) நிறைவேறாத ஆசை வளர்வதும் ஏனோ? நிலைபெறாததும் ஏனோ? வினை தானோ? எது நேரினும் அழியாத ஒரு மனம் ஒன்றாகிய மெய்க் காதல் எந்நாளும் இன்பம் - பிரிந்தால் காதலே துன்பம் (கனவி) - தேவதாஸ் 198