பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசுரு நம்ம கையிலே! உசுரு நம்ப கையிலே - நல்ல கோமான்களானாலும் சீமான்களானாலும் சாமான்யமானவர்க ளானாலும் அவுங்க (உசுரு) அடுத்து பட்டம் பெறும் சின்ன ராஜா - அவர் அன்பைப் பெற்ற இவர் என்ன லேசா - இனி படிச்ச பசங்களெல்லாம் நம்ப கூஜா - சிலர் பதவிக்காக உன்னெ பண்ணிக்கோணும் தாஜா ! உசுரு நம்ப கையிலே - ஊரார் உசுரு நம்ப கையிலே - செல்வர் உசுரு நம்ப கையிலே... கண்டுரெ நெனச்சா ரெண்டுராப் பண்ணுவேன் சொன்னாச் சொன்னபடி நடக்கணும் - இவரு சொன்னாச் சொன்னபடி நடக்கணும். நம்மைக் கண்டாலே எல்லாரும் கை கட்டி வாய்பொத்தி கப்புச் சிப்புண்ணு நிக்கணும். முனியன் பொண்டாட்டி நீயிண்ணு காட்டாதிருக்கணும் புது தினுசா உன்னெ மாத்தணும். பசும்பொன் காய்ச்ச மரம் போல் பூட்டிக்கோணும் மாட்டிக்கோணும். போறவங்க வாரவங்க மதிக்கணும் - அய்யா உசுரு நம்ப கையிலே - சீமான் உசுரு நம்ப கையிலே.... கள்ளபார்ட் முத்துலிங்கம் ஜெகமெங்கும் புகழோங்கும் தீர வீர சிங்கம் சிங்கப்பூர் ரெங்கோனில் தங்க மெடல் பெற்றுவந்த துங்கம் - துங்கம் - துங்கம் சீரோங்கும் சென்னை நகர் கள்ள பார்ட்டில் பேர் போன தர்மலிங்கம் திருப்பாத மறவாத சீடனடா என்பேர் முத்து லிங்கம் - லிங்கம் - லிங்கம்! 200