பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் பலவிதம் உலகம் பலவிதம் - இந்த (உல) இவர் - அதிலேதான் ஒருவிதம் (உல) இலைமறைந்த காயைப்போல இருப்பார் சிலபேர் எல்லாம் தெரிந்த மனுஷன்போல ஏய்ப்பார் சிலபேர் (உல) ஒட்டுச்சடை மீசைதாடி உருவங்கள் சிலதுண்டு - திரு (ஒட்டுச்) பட்டை நாமம் தீட்டுகின்ற பக்திமான்கள் உண்டு - தெய்வ (பக்தி) கஷ்டப்பட்டுப் பட்டிடாத காவடிகள் உண்டு - அன்னக் (காவடிகள்) காக்கா பிடிச்சுக் காலங்கடத்தும் காவாலிகளும் உண்டு - சுத்தக் (காவா) (உல) ஒட்டிக்கு ரெட்டியாக வட்டிக்குப் பணம் கொடுத்து ஊரார் முதலைக் கொள்ளையடிப்பார் - இவர் அதை ஊதுபத்தி சாம்பிராணி சூடம் வாங்கி எரிப்பார் உண்ணாமலே செலவழிப்பார்! பட்டம் பதவிக் கிறைப்பார் - கோயில் கட்டுதற்கும் செலவழிப்பார் - இந்த (உலகம்) கொண்டாடும் சுபதினம் கொண்டாடும் சுபதினமே - இன்று நாம் எல்லோரும் (கொண்) மணிமுடி கொண்டாளும் ராஜகுமாரி - சிங்காரியைக் (கொண்) வண்டாடும் குழலாள் விழிமானாள் - தேன் (வண்டா) பெண் மண்ணாளும் சுபநாள் இதுவே நாள் தண்டாமரை மேவும் தங்கைபோலே தமிழ்த்தாய் போலே கலைகள் வளர்க்கு மின்னாளைக் (கொண்) வானம் பொழியும் பசிநீங்கும் - முகில்பலன் காணும், உழவும் தொழிலோங்கும் மானமும் சீலமும் மாண்பெனும் நாளும் வாழிவினில் மணம்வீசும் இதுநாளே ஜாதி விரோதமிலாப் பொது நீதி சதா நிலவும் அமைதி (ஜாதி) நீதி புரியும் எங்கள் சந்தோஷ வடிவான ராணியை ஜகம் புகழும் குணாகரியை நிரஞ்சனியை (கொண்) - ராஜகுமாரி 206