பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி வாங்குவீர்! செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவுச் சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்! திராவிட நாட்டினர் கூேடிமம் வேண்டி சிங்கார ஆடைகள் வாங்குவீர்! (செந்தமிழ்) சொந்த மிகுந்த சகோதரிகள் - அன்புத் தோழர்களே! பெரியோர்களே! துன்ப மடைந்தவர் இன்பமுறும்படி துணை செய்யவேண்டும் நீங்களே! (செந்தமிழ்) சின்ளைப் பட்டி திண்டுக் கல்லைச் சேர்ந்த சித்தையங் கோட்டை பூரீ வில்லிப்புத்துார் இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டை சென்னை தஞ்சை காஞ்சி திருநெல் வேலி பாளையங் கோட்டை தினுசுகளிருக்கு வாங்க வாங்க! சீர்படுத்தலாம் நாட்டை நம்ம (செந்தமிழ்) திருப்பூ ரோடு ஈரோடு பவானி சேலம் கோயம்புத்துர் - மற்றும் ஜில்லாக்களிலும் நெய் தொழிலாளர் செய் தொழிலற்றார் கெட்டார். தெருத் தெருவாகப் பிச்சை எடுத்தார்! திண்டாடி இருப்பிடம் விட்டார்! சேயொரு பக்கம் தாயொரு பக்கம் சிரமப்பட்டார் செத்தார் காணிர்! (செந்தமிழ்) வருஷம் ஒருமுறை மார்கழி மாசம் வைகுந்தம் காட்டும் ஏகாதசி - இப்போ மாதம் பலமுறை வைகுந்தங் காட்டும் ஏழைகள் வீட்டில் பசிபசி! - இதில் கருணை காட்ட நம்ம கனவான்களுக்கு நேரமில்லை ரொம்ப பிசிபிசி" கைத்தறியாளர்கள் கஷ்டத்தைப் போக்கிக் கண்ணாலே பார்க்கணும் குஷி குஷி (செந்தமிழ்) 210