பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடக்கத்திச் சேட்டாம் மார்வாடி கடையில் வாயில் சிலுக்கு மல்லு - பல வர்ண தினுசுகள் ட்ரில்லு - அதை வாங்காதே விட்டுத் தள்ளு - அவங் கடனுக்குக் கொடுத்து எழுதிடும் பில்லு கச்சேரி வரைக்கும் செல்லும் - தலையில் கணக்காப் போடுவாங் கல்லு - என்றே கட்டாயம் எல்லோருக்கும் சொல்லு சொல்லு நம்ம (செந்தமிழ்) ஊடைக்கும் பாவுக்கும் ஈரிழையுண்டு கேரளத்து முண்டு. நம்ம (கேர) - அது உடம்பு தேய்க்கவும் துடைக்க வுதவும் வேண்டாம் சர்வண்டு - விலை ஜோடி யொண்ணுக்கு ரூபா ரெண்டு அணா பனிரெண்டு - ரூபா ரெண்டும் பனிரெண்டு - எளியார் துயரம் நீங்கவும் தொழிலு மோங்கவும் தயவு செய்ய வேண்டும் - எல்லோரும் தயவு செய்ய வேண்டும் - நம்ம (செந்தமிழ்) கான்வெண்ட் பள்ளித் தமிழ்: சாட்டர் டேயில் ஆவ்டே குட்டே சண்டே வெரிக் குட்டே ஆட்டமாடத் தகுந்த ஸ்கூல் ஹாலிடே குட்டே (சா) மண்டே ட்டியூஸ்டே வெட்னஸ்டே - - - அண்டதர் ஸ்கூல் டேஸ் யூஸ்லஸ் டேஸ் (சா) இன்டிசம்பர் பிப்டீன் டேஸ் கிருஸ்மஸ் வெக்கேசன் ஏப்ரல்மே ஜூன் பார்ட்டிபைஸ்டேஸ் ஆன் - சம்மர் வெக்கேசன் (சா) அண்டக்ட்டோபர் தசரா டென்டேஸ் இண்டுஸ்ஹாலிடே மகமடன்ஹாலிடேஸ் இண்டிபெண்டன்டே ரிபப்ளிக் ஹாலிடே பண்டிட்நேரு சில்ரன்ஸ் ஹாலிடே இவ்வகையான எவ்வரி டேக்களும் வெரி வெரி குட்டே வெரிவெரி குட்டே (சா) 211