பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலங்கு இட வாராய்! நலங்கிட வாராய் லட்சுமி நலங்கிட வாராய் - நல்ல நாயகனொடு நானிலந்தனில் நாளும் வாழ்ந்திடும் உத்தமி (நலங்கிட) அநுபல்லவி கலந்த சந்தனம் கமகமவெனக் கையாலே கொஞ்சம் தொட்டுக்கோ - ஒளிர் கருப்புச் சாந்து செவத்த குங்குமம் கஸ்தூரிப் பொட்டும் இட்டுக்கோ காஞ்சிபுரப் பட்டுங் கட்டிக்கோ - மஞ்சள் கயிற்றிலே கட்டுப் பட்டுக்கோ - கொண்ட கணவனோடு வாழ்விலுந் தாழ்விலும் இணைபிரியாமல் ஒட்டிக்கோ! (நலங்கிட) சரணம் மாசில்லாத ராம லிங்கத்தின் மருகியென் றாலே - உன்னை மதித்திடாத பேர்களுண்டோ மரகதக் குயிலே! ஆசை யமர நாதன் - மன வாளன் என்றாலே - பெரும் அதிர்ஷ்டம் பாக்கியம் அனைத்துஞ் சேர்ந்த - மகா லட்சுமி நீ மயிலே! (நலங்கிட) 212