பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிந்தனார் சரித்திரம் : ரயிலே ரயிலே! வழி மறைத்திருக்கிறார் - மலை போல் டிக்கெட் கலெக்டர் வந்து தடுத்து நிற்குறார் புது ஸுட்டும் ...கோட்டும் போட்டு! (வழி) ரயிலே ரயிலே ...! ரயிலே ரயிலே ரயிலே ... ரயிலே! கரகர கரவெனச் சக்கரம் சுழலக் கரும்புகை யோடு வருகிற ரயிலே! கனதன வான்கள் ஏறிடும் ரயிலே! கன வேகத்தோடு போகிற ரயிலே! ரயிலே ரயிலே ... ரயிலே! ரயலே ரயிலே . ரயிலே மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மத பேதத்தை ஒழித்திட்ட ரயிலே! இருபுறமும் ஜென்னல் கதவு களோடு 'எஸ்.அய்.ஆர்.' என்ற எழுத்துள்ள ரயிலே! ரயிலே ரயிலே. ரயிலே! ரயிலே ரயிலே... ரயிலே! தண்ட வாளத்தின் மீதே ஏறி தாண்டவ மாடிடும் ஆண்டவன் நீயே லண்டனை விட்டு இந்தியாவுக்கு ரமணியமாய் வந்த ரயிலே ரயிலே! ரயிலே ரயிலே... ரயிலே! ரயிலே ரயிலே... ரயிலே...! தேசம் சுற்றிக் காட்டிடும் ரயிலே! 'ட்ரு வேண்ட்ரம் விட்டுப் புறப்படும் ரயிலே! மாசில்லாத உன் மகிமை என் சொல்வேன்! மதராசுக்குப் போகிற ரயிலே! ரயிலே ரயிலே. ரயிலே! ரயிலே ரயிலே... ரயிலே...! கிந்தன் கல்விக்குச் சென்னை செல்ல வேண்டல் சென்னை என்றொரு ஸ்தல மொன்றிருக்குதாம்! - அங்கு சென்ற பேர்க்குச் செலவும் வரவும் அதிகமாகுதாம்! உயரும் லைட்டு ஹவுஸும் தெரியுதாம்! - அதைப் பார்த்து ஸ்டீமர், 213