பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரிருக்கிற திசையை யறிகுதாம் அய்யனே (சென்னை) போய் வரக் கொஞ்சம் பொருளைத் தாருமே! லெதர் பூட்ஸுக் காலைப் போற்றினேன் - திருக் கண்ணால் பாருமே (சென்னை) பண்ணையார் மறுத்தல் பயமில்லாமலே எதிரே யிங்கே நில்லாதே - அதைச் சொல்லாதே! - மடப் பயலே! நீ பட்டணமென்று சொல்லப் படுமோடா? பேசப்படு மோடா?- மடப் பயலே! நீ பட்டண மென்பதை விடு! பழைய சோத்தைச் சாப்பிடு! பட்டிக் காட்டில் படித்திடு - நல்ல பைய னென்ற பேர் எடுத்திடு: மடப் பயலே...! ஞாயந் தானா நீ சொல்லு நல்ல நாகரீகம் நம்ம ஜாதிக் கடுக்கு மோ? காடுங் கரை உழுகும் பிழைப்பு - அது கடவுள் நமக்கமைத்த அமைப்பு ஏடெழுத்தாணி கொள்ளும் படிப்பு - மிக ஏற்றமான ஜாதிக்காம் அந்தப் பொறுப்பு (மடப்பயலே.) கிந்தனாரின் வெற்றி! படித்தானே பலபல கலைகளைக் கிந்தன் - பள்ளிப் பிள்ளைகளோடு கள்ளங் கபட மின்றிப் படித்தானே! கொடுத்த கொஸ்டீன்களுக்கெல்லாம் பாஸ்மார்க்காய் எடுத்து ஸ்காலர் விப் மிக நோக்காய்ப் )والا( வேகமாக உத்தியோகத்தில் - மனசு விரும்பிப் படிப்பதிலே பெற்றான் பரிசு ஜாகரபீ, ஹிஸ்ட்ரி, தமிழும், இங்கிலீசும் தக்கபடி மேதமாடிக்ஸ் சயன்ஸ் (படி) கிந்தா நீ திடசித்தன்! - உன்னைக் கிண்டல் செய்தேன் - அந்தோ நானொரு பித்தன்!! 214