பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சேரிக்கும் போனாலும் சட்டப்படி நமக்கதிலே சலுகை யேது மில் லேன்னு பட்டணத்துக் காரன் சொன்னான் - அதனாலே இஷ்டப் படலே சிங்கமே சிங்கம் - வீடு கட்டிக்கத்தான் இஷ்டப் படலே சிங்கமே சிங்கம்! அதைவிடு போகட்டும்! நஞ்சை புஞ்சை வாங்காமெ நாகரீக மில்லாமெ பஞ்சப் பாட்டுப் பாடியே வாழ்வதேன்? பதிலைச் சொல்லடி தங்கமே தங்கம் - கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லடி தங்கமே தங்கம்! அதுவா? . கஞ்சி குடிக்கணுமாம், கஞ்சி குடிக்கணுமாம்; கஷ்டப் பாடு படனுமாம், கலப்பை புடிச்சு உழாதவன் உழவங்கிட்டே விடணுமாம்; அஞ்சுல ரெண்டு பங்கு நமக்கு உழவனுக்கு மூணுன்னு தஞ்சாவூருக் காரன் சொன்னான்; எவன் சொன்னான்? தஞ்சாவூருக் காரன் சொன்னான் - அதனாலே தலையிடலே சிங்கமே சிங்கம்! - நஞ்சை புஞ்சையிலே தலையிடலே சிங்கமே சிங்கம்! முன்னாலே இருக்குறவங்க முண்டாசு மறைக்குதுன்னு பின்னாலே இருக்குறவங்க பேச்சுக் கேக்குது கண்ணாடி போட்ட மனுசன் கஞ்சம் போலத் தோணுறாரு கம்பி நீட்டிடப் பாக்குறாரு கவனிச்சுப் பாரு! - ஆளே - கவனிச்சுப் பாரு! தன்னாலே இங்கே ஒருத்தர் தாளத்தைப் போட்டுவுட்டுப் பிட்டாரு தள்ளாடும் தாத்தா ஒருத்தர் தலையெத் தலையே ஆட்டுறாரு (நாடோடிக்) - அமர தீபம் 218