பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் ஆண் பெண் வம்புச் சண்டை! தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி - அடியாத்தே! சாஞ்சி நிக்கற அழகைப் பாரடி அஞ்சாறு கலர்ச் சட்டை - அதில் யானை குதிரை ஒட்டை - புதுப் பஞ்சாங்கம் போல் வருச மாசம் பதிஞ்சிருக்கிற ஜோரு - அதிசயம் பாரு (தஞ்) அடி வாலுக் கொண்டைக் காரி - நீ வம்புச் சண்டைக் காரி! உன் வாயை அடக்கிப் பேசுதம்பி ஊரு தான் பொல்லாது உடம்புதான் தாங்காது! வம்புக் கிழுக்கிறதும் வாய்ச்சண்டை போடுவதும் பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம்: ஜம்பமாய்ப் பேசறதும் சவடால் அடிக்கிறதும் ஆம்பிளைக்கே பொதுவா அமைந்த குணம்: தெரியாதா? சொல்லத் தெரியாதா? - உங்கள் சேதியை இன்னும் சொல்லவா? கேலிக்கு இடமல்லவா?- சொன்னாலே கேலிக்கு இடமல்லவா? உள்ளத்தில் குறும்பாய்ச் சிரித்திடுவார் - அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார் கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார் - தன் காரியம் முடிந்த பின் மறந்திடுவார்! (தெரியாதா) ஊருக்கு நீதி உரைத்திடுவார் - தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார். கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார் - தன் காரியம் முடிந்த பின் மறைந்திடுவார்! (தெரியாதா) அன்புடனே முழு மனத்தோடு பெண்ணை நம்பினால் கொடுப்பார் திருவோடு, நம்பிய சகுந்தலை பட்டபாடு இந்த நாடறிந்த தல்லவோ வெட்கக் கேடு! (தெரியாதா) - தாய் மகளுக்குக் கட்டிய தாலி 221