பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியில்லா(ர்) அந்தகர் ஆரபி ஆதி பல்லவி கல்வியைப் போலொரு செல்வம் உளதோ! காணவேணும் புவியோரே! (கல்வி) அநுபல்லவி வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா! வேந்தர்கள் அனைவரும் தான் கொள்ள முடியா! அள்ளிக் கொடுப்பினும் எந்நாளும் குறையா! அறிவிற் குணவுமாம் யாதினும் அழியாக் (கல்வி) சரணம் கலைஞானமே இல்லார் கானில் வாழ்மரம்! கடையராம் மதியினர் பா மரம்! அலகையொடு மிருகம் ஆவார் சிறியார் அந்தகர் எதற்கும் ஆகார் ஆகார்! (கல்வி) சுரமுடுகு பா மணம் நிறை பாகெனவே இன்பமருள் (கலை) பங் கேருகநற் றுங்கா தனியருள் சங்கீத சம்ப்ரதாய ரச (கலை) பரணிமுதலாய் தூது காதலுடன் அந்தாதி திருவா யிரமணிமாலை புராணம் குறவர் வஞ்சி கலம்பகமும் என்று வந்து பண்பாடும் ப்ரபல - (கலை) -தமிழ் அறியும் பெருமாள் 227