பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் கடமையைச் செய்! தெய்வத்தாலாகாது என்றாலும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்பதாலும் - நீ செய்வன திருந்தச் செய் மென்மேலும் - உண்மை ஜெயிக்குமடா தம்பி எந்த நாளும்! மலையது கலங்கிடினும் கலங்காதே! - மனம் கலங்காதே! மானமற்ற பேடியென வாழாதே! உலகிலுன் கடமை செய்யத் தவறாதே - அதற்கு உயிரை நீ பெரிதனவே மதியாதே - மனிதா முன்னறியும் தெய்வமடா அன்னை பிதா - அவர் மொழிந்த தெல்லாம் நமக்கு வேதமடா - மனிதா (செய்வன நல்லால்லே...! பொதுக் கூட்டங்களுக்குப் போறதும் பூமாலை வாங்கறதும் - நீங்க புகழைத் தேடுவதும் - வீட்டில் பெண்டாட்டி புள்ளே திண்டாட்டப்பட்டுப் புவ்வாவுக்குச் சாகிறதும் நல்லால்லே நல்லால்லே நல்லால்லே! கொடியைப் புடிச்சுத் தெருத்தெருவா கூச்சல் போடறதும் - கட்சி கொள்கை பேசுறதும் - அங்கே குண்டாந் தடியைக் கண்டா நீங்க குடல் தெறிக்க ஒடுறதும் நல்லால்லே நல்லால்லே நல்லால்லே! அஞ்சு ஏக்கர் புஞ்சைநெலத்தை நஞ்சை பண்ணாமெ - நாத்து நடவு நடாமெ - உணவுக்கு அடுத்த நாட்டுக் காரனையே அனுப்பச் சொல்லிக் கேக்கறதும் நல்லால்லே நல்லால்லே நல்லால்லே! — шрботтиражбіт 228