பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது அறிவு? ஒன்றே மாந்தர்குலம் ஒருவனே கடவுள் என்றே தேறுவது அறிவாகும்! அது நன்றே யாகுமென உணர்ந்திடாரை மக்கள் என்றே கூறுவது தவறாகும்! பெண்ணும் ஆணுமென பிறந்த ஜாதியது மண்மேல் ரெண்டுதான் வேறில்லை! இதில் பேதம் நாட்டி மனப்பகைமை காட்டி நாம் பிரிந்து வாழ்வதில் பயனில்லை. சிலைகள் செய்துமே கடவுள் நாமம் தந்து புலவர் பாடினதும் எதனாலே? புத்தி - தெளிவில்லாரும் நல்ல வழியிலே மனதைச் செலுத்த வேண்டுமென்ற முறையாலே அழிந்திடாது என்றும் குறைந்திடாது மனம் மறந்திடாது நிற்கும் பொருள் யாது...? "உடல்" அழிந்தபோதும் புகழ் மறைந்திடாது நிற்கும் அறிவை யூட்டும் கல்வி புவிமீது எது...? பகுத்தறிவை யூட்டும் கல்வி புவிமீது அடக்கவேண்டியது யாரை...? "துஷ்டனை" மனிதன் அடக்க வேண்டியது யாரை? "தன்னைத்தானே!" கடைப்பிடிக்க வேண்டியது என்ன? "காக்கா சார்!" 229