பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பிலா மாந்தர் பல்லவி பாம்போடு பழகலாம் பெண்மணி பண்பில்லா மாந்தருடனே பழகினால் அடாது என் கண்மணி அதனிலும் (பாம்போடு) அநுபல்லவி வீம்போடு பழகினால் வேலை கெடும் - கெட்ட வீணர் ஸ்நேகத்தால் மானங் கெடும் சோம்பேறித் தன்மையால் சுகங் கெடும் சொல்கிறேன் - அதனிலும் (பாம்போடு) சரணம் அவதியாம் மமதை அகங்காரம் - பிறர் அடிமை என்று செய்யும் அதிகாரம் இவையெலாம் தவறாகும் இந்நேரம் எண்ணுவாய் - இதனிலும் (பாம்போடு) அன்பு சார்ந்த மன விளக்கம் - அருள் அறம் என்ற நெறி ஒழுக்கம் நன்று தேர்ந்திடார் இணக்கம் நியாயமா? - அதனிலும் (பாம்போடு) காலம் அறிந்து நடக்கணும் கூழென்றாலும் பசித்த வேளை குளித்து நன்றாய்க் குடிக்கனும்: பாலென்றாலும் பசியா வேளை பட்டினியாகப் படுக்கணும்! கால மறிந்தே நடக்கணும் - நம் கடமையைச் செய்தே முடிக்கணும்; ஒலைச் சுவடியை எடுக்கணும் - அதை உணர்ச்சியாகப் படிக்கனும்! 231