பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல்நலம் பேணுக பாத்துக்கோங்க நல்லாப் பார்த்துக்கோங்க - கொஞ்சம் பக்குவமாக ஒடம்பெப் பாத்துக்கோங்க பூர்த்தியாக நூறாண்டு பூமிமேலே - மக்கள் சுக போகந்தேடி வாழ்ந் திடத்தேகம் வேண்டுமாகையாலே (பாத்து) காத்தாலே ஒடும் ஒன்பதோட்டை கடிகாரம் போன்ற சோத்துமூட்டை - இதை ஆஸ்திபோல காத்து வச்சா ஆண்டிடலாம் நாட்டை அஜாக்ரதையாக விட்டுவிடாதீங்க கோட்டை (பாத்து) கடலை எண்ணெய் பதார்த்தங்களைத் தொடாமல் - நேரம் காலம் தெரியாமல் உண்டு கெடாமல் (நிலக்) - ஊசை அடையும் வடையும் அடச்சு அஜீரணப்படாமல் ஆஸ்பத்திரி ஆளுங்களெ அவஸ்தெப்படவிடாமல் (பாத்து) பாதி வயத்துச்சோறு அதில பாதி நீரு பசியெடுத்த பின்னாலே தின்னுங்க - மாட்டுப் பாலு முட்டை கீரை பாதாங்கொட்டை - நல்ல பழவர்க்கம் அதிகமாக உண்ணுங்க தாது விருத்தி தன்னை உண்டாக்குங்க - கெட்ட சகவாசப் பழக்கந்தனை நீக்குங்க - சொன்ன சத்தியத்தை மறந்தாலும் மறக்கலாமுங்க - ஆனால் பத்தியத்தெ ஒருநாளும் மறக்காதீங்க - நீங்க (பாத்து) வெங்காயத்திலே வைடமின் ‘ஏ’யிருக்குது தின்னுங்க மீனில் பீ இருக்குது தின்னுங்க வெண்மையான முட்டைக்கோஸில் தக்காளியில் 'ஸி'யிருக்குது வெண்டைக்காயில் கொழுப்பிருக்குது தின்னுங்க இங்கிலீஸ் முறைப்படிக்கு எதிலே சத்து இருக்குதோ இயற்கைப் பொருளை ஆராய்ச்சி பண்ணுங்க - வைட்டமின் ஏ பி லி டி. ஈ யைச் சேர்த்துத் தின்னுங்க இருக்கும் வரைக்கும் சுகப்பட்டது மிச்சங்க - பத்திரம் (பாத்து) 232