பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பே உயர்வு வட்டி கொடுத்தும் வரவு இல்லே நோட்டிலே - இந்த வம்பு தும்பு அதிகமாச்சு நாட்டிலே. அரைப்படியை ஒருபடியா அளக்குறான் - பணத்தை ஆகாசக் கோட்டையிலே பூட்டுறான். கட்சிகட்சி என்று சொல்லிச் சாகுறான் - மனுசன் கஞ்சிக்காக ஏங்கிஏங்கி வாடுறான். என்னசெய்வோம் இந்தத் துன்பம் நாட்டிலே - கடவுள் எழுதிவிட்டான் நமது தலையில் ஒட்டிலே! என்றுசொல்லி மனதுதளர்ந்து நோகுறான் - ஏழை மென்று வாயைப் பேந்தப் பேந்த விழிக்கிறான்! நல்லவர்கள் நலிந்து மண்ணில்வீழுறார் - கெட்ட நாசகாலர் நாலடுக்கில் வாழுறார்: கூலிகேட்டாக் கேலிபண்ணிப் பேசுறான் - அவன் வாலைப் பொண்ணைக்கண்டு கண்ணையடிக்குறான்! நெஞ்சொடியப் பாடுபட்டும் வயித்திலே - கூழுக் கஞ்சியில்லை யானதாலே செகத்திலே, கூட்டுப்பண்ணை வைக்கவேணும் ஊரிலே - தரிசு காட்டுநிலம் கழனியாகும் பாரிலே, உழைப்பினாலே உயர்வு என்ற எண்ணமே - வந்திடிலே களைத்திடாது வாழ்வோம்.இது திண்ணமே! முன்அறியும் தெய்வம் - அன்னை பிதா! தாயின் மொழி வழியே தந்தை மொழி காத்தான் தரணியில் ரவிகுல ராமன்! தந்தை சுகம் காக்க தனது சுகம் மாய்த்தான் சந்திர குலத் தோன்றலெனும் பீஷ்மன்!! 235