பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆளை ஏய்க்க இனி முடியாது! தொகையறா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர் என்றே - சொல்லும் பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி வழிசென்று மாண்பால் உயர்ந்தநாடு நமது தாய்நாடு. பாடல் நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம் - பட்ட பாட்டுக்குத் தகுந்த ஆதாயம் - உண்டு பழைய கொள்கைகளை விடுவது ஞாயம்! (நாட்டு) காட்டையும் மேட்யுைம் தோட்டம் தொடிகள் கழனிகள் செய்வது திறமை - அதனால் கட்டாயம் நீங்கும் வறுமை - அவ்வைப் பாட்டியும் பாட்டால் பாடிப் பெருமை பாராட்டிய தொழில் முறைமை - இது பரம்பரை யாய் நமக்குரிமை தமிழ் (நாட்டு) ஒத்தைக் குடித்தனம் பத்துக் காணியில் உழுது பாடுபட முடியாது - ஒரு பத்துக் குடித்தனம் நூறு காணியில் பாங்காய் உழுவது தான் தோது பாளையக் காரர் ராஜாதி ராஜர் பதவிகள் பறக்கின்ற போது - நம்ம பட்டாக்கள் மிட்டா மிராசுகள் ஜம்பம் கட்டாய மாய்ப் பலிக் காது (நாட்டு) நாளுக்கு நாளாக் காலம் மாறுது நடப்பதை நெனைச்சா நடுக்க மாகுது ஆளை ஏய்க்கஇனி முடியாது - மக்கள் ஆட்சியில் சுயநலம் கூடாது - நம்ம (நாட்டு) 236