பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புருஷன் பொண்டாட்டி புள்ளெ குட்டிங்க உருப்படிக் கணக்கையும் போட்டுக் கணும் சரி சமமாக விகிதாச் சாரப்படிச் சாப்பாட்டுச் செலவுக்கும் வாங்கிக் கணும். வரும்படி தன்னை அதிகமாக் கணும் வகை தொகையான செலவுஞ் செய்யனும் உலகம் நம்மைக் கண்டு நடக்கவே உண்மையோடு நாம் உழைக்கணும் - உயிர் பிழைக்கணும். (நாட்டு) - எங்கள் வீட்டு மகாலட்சுமி களையிருந்தால் வளம் இல்லை! வயலுக்குள்ளே களையிருந்தா பயிருக்கு வளமிருக்காது - நெல்லுப் பயிருக்கு வளமிருக்காது! நல்ல மனிதர்க்குள்ளே பயமிருந்தா நாட்டுக்கு நலம் வளராது - இந்த நாட்டுக்கு நலம் வளராது மனசுக்குள்ளே பயமிருந்தா வாழ்வுதான் உயராது - புவி வாழ்வுதான் உயராது செல்லும் மார்க்கத்திலே தவறிருந்தா மதித்திடும் புகழ் உயராது: பாடுபட்டுப் பயிர் வளர்த்து பலனெடுக் கோணும் - நல்ல பலனெடுக் கோணும்! - அதைப் பலபேருக்கும் பகிர்ந்து கொடுத்துப் பஞ்சம் நீக்கோணும் - உணவுப் பஞ்சம் நீக்கோணும்!! 237