பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடி கெடுத்த குடி ஒழிஞ்சுது! குடி கெடுத்த குடி யொழிஞ்சது அடிதடி சண்டை யதுங் கொறைஞ்சது: ஆணும் பெண்ணும் புத்தி யறிஞ்சது - எங்க நாட்டிலே, அக்டோபர் ரெண்டுக்கு மேலே! (குடி கெடுத்த) தாலிக் கயிறு தனியா யிருக்கும் தங்க மிருக்காது - அதிலே (தங்கம்) தண்ணி குடிக்கத் தகரக் கொவளை சொம்பு மிருக்காது - வீட்டிலே! சொம்பு மிருக்காது - வீட்டிலே! பாலு வாங்கக் கொழந்தப் பசிக்குப் பணமிருக்காது - கையிலே - பணமிருக்காது பாழுங் கள்ளைக் குடிப்பது மட்டும் நாளுந் தப்பாது - எந்த (நாளுந்) கூலிக் காசில் சோளம் வாங்கிக் கூழுக் காச்சி வச்சிருப்பா! ஆளப் பாத்தா ஆம்பிளை தான் அதையும் வித்துக் குடிச்சிவிடுவா(ன்) கடைக்குப் போவாங்... கள்ளக் குடிப்பாங்... காரிய மில்லாமச் சண்டைக்குப் போவான்! வடையை ரெண்டை வாங்கிக்குவான். வழி நெடுகப் பேசிக்குவான்! வந்து கதவைத் தட்டுவான்; வாயில வந்ததைத் திட்டுவான் - அவன் வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை வஞ்சகக் காரி யென்றுதைப்பான்; வார்சுக்காக சிசுவைத் தாங்கும் வயித்திலே யெட்டி மிதிப்பான்; அப்பப்பா...! இந்தக் கள்ளுக்குடியை நம்ம நாட்டை விட்டு ஒழிச்ச அந்த நல்ல மனுசன் காலுக்குக் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கும்பிடு! - நல்ல 242