பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெட்டியில் தூங்கும் பேரின்பம்! தெய்வத் திரு மகளே! - தங்கமே! செல்வச் செழும் பொருளே (தெய்வ) செய்ய மலர் மயிலே - தங்கமே! : செய்குவை இன்னருளே! (தெய்வ) அலைகடல் தந்தவளே! - தங்கமே! அமுதொடு வந்தவளே! (அலை) கலைமகள் மாண்பை யெல்லாம் - தங்கமே! கைவிலை கொள்பவளே! கங்கை நன்னீர் தனிலே - தங்கமே! காகுத்தன் மார்பினிலே தங்கும் மருக் கொழுந்தே - தங்கமே சங்கடம் தீர்த்திடுவாய்! திருமண மேடையிலே - தங்கமே! சிறந்த பட்டாடையிலே நறுமலர் வாடையிலே - தங்கமே! நாடிடும் நாயகியே! செட்டியின் வட்டியிலே - வளரும் ஜீவ சிந்தாமணியே! - கஞ்சர் பெட்டியிலே தூங்கும் - உலகின் பேர் இன்பமே வருவாய்! 248