பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கே தேடுவேன்? எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்? உலகம் செழிக்க உதவும் பணத்தை கருப்பு மார்க்கட்டில் போய் மறைந்தாயோ? கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ? திருப்பதி உண்டியலில் போய் விழுந் தாயோ? சூடம் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ? தேர்தலில் சிக்கித் தேய்ந்து போனாயோ? திருடன் கையிலே மாட்டிக் கொண்டாயோ? கிண்டி ரேஸில் சிக்கிக் கிறுகிறுத் தாயோ? அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை இரும்புப் பெட்டிக்குள்ளே போய் ஒளிந் தாயோ? இரக்கமுள்ளவரிடம் இல்லாத பணத்தை பணமே. பணமே. பணமே... பணமே... பணம் பந்தியிலே... பணம் பணம் பணம் பணம் பணம் பந்தியிலே! குணம் குணம் குணம் குணம் குணம் குப்பையிலே? இனம் புகழ் மணம் மகா கனம் தரும் பணமே! சுகமெல்லாம் தந்திடும் பொல்லாத பணம் இல்லான் நடைப்பினமே. காசால ஆகாத காரியமில்லை (எங்கே) (எங்கே) (எங்கே) (எங்கே) (எங்கே) - பனம் (பணம்) (பணம்) காசில்லேனா கோயில் குளம் பூஜையுமில்லே ஆசை நண்பர் பெண்டு பிள்ளை அண்ணன் தம்பி இல்லே! (ஒருத்தனும் இல்லை போ) கலை ஆட்டம் பொதுக் கூட்டம் வெள்ளையப்பன் இல்லாதில்லே! (பணம்) (பணம்) - மாமியார் மெச்சிய மருமகள் 251