பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைநில்லாது உலகினிலே! ராகம் : கீர்வாணி தாளம் ஏகம் பல்லவி ஓரிடந்தனிலே - நிலை நில்லாதுலகினிலே உருண்டோடும் பணங்காசெனும் உருவமான பொருளே! அநுபல்லவி ஊரும் பேறும் தெரியாதவரை உயர்ந்தோராக்கிடுமே! - அது (உயர்...) உருண்டோடிடும் பணங்காசெனும் உருவமான பொருளே சரணம் காசு நல்ல காரியம் செய்யாது கண்மூடித்துங்கக் கருணை காட்டாது களவு கொலை யுண்டாக்கும் கவலைமிகவும் சேர்க்கும் காமுறும் இன்பமும் சொந்தமும் எல்லாமே நீக்கும் (ஓரிடந்தனிலே) - வேலைக்காரி செல்வமே சீவாதாரம்! செல்வமே சுக ஜீவாதாரம் திருமகள் அவதாரம் மேலாம் (செல்வ) உள்ளபடி செல்வம் இல்லாதவரே உலகினில் உயிர்வாழ்வது தவறே! கல்லா ரெனினும் காசுள்ளவரைக் காட்சிப் பொருளாய்க் காணார் எவரே? (செல்வ) தேசுலாவும் அஷ்டபோகானந்தம் செல்வமே தரும்இது சித்தாந்தம்! பேசும் கீர்த்தியே தேடிடும் சொந்தம் காசில்லார்க் கதனில்ஏது சம்பந்தம்? (செல்வ) - குபேர குசேலா 252