பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவர் இன்பம் ஒருவர் துன்பம்! பணக்காரர் தேடுகிற இன்பம் ஏழைப் பாட்டாளி மக்கள் படுந்துன்பம் - காசு (பண) குணத்தோடு பழகாத கூட்டம் - கூலி குறைத்துக் கொடுக்கப் போராட்டம் செய்யும்! குளம் வெட்டுவார், மடம் கட்டுவார் - கடன் கொடுத்தே பின் வழக்காடி அடுத்தவரைக் கெடுத்தாகும் (பண) காசு பணங் கொண்டவர்க்குக் கவலையில்லாத நேரம் ஏது? - வெள்ளிக் (காசு) அவர் கண்மூடித் துங்க முடியாது! - பகல் காலத்திலே கொள்ளை லாபத்திலே காருண்யம் இன்றித்தேடும் - தங்கக் (காசு) கூழையுண்ணும் ஏழை மணிக் கேழு மயில் நடப்பான் - பணம் கொண்ட செல்லன் வண்டி யேற ரெண்டு பேரை அழைப்பான்!! வேலை செய்யும் கூலி ஒரு நாழி அன்னம் புசிப்பான் - ஆளை ஏய்க்கும் கோழை முதலாளி சோற்றை வெறுப்பான்! நாட்டைக் காக்கும் ஏழை வீட்டுக் காரி உடம்பு - கட்டு மஸ்தும் கல்லுப் போலும்இருக்கும் - அது இரும்பு வீட்டைக் காக்கும் செல்வனின் பெண்டாட்டி உடம்பு - அது வெளியே சொல்லும் விஷயமல்ல மெலிந்த கரும்பு நாட்டைக் கெடுக்கும் நவ நாகரீகம் நாடுவார்; பூட்டி வைத்த சொர்க்கத்தைக் காட்டி உறவாடுவார்; பூட்டும் நகையாலே பொருளாலே புகழ் தேடும் (பண) - பைத்தியகாரன் 253