பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிந்த பின் மனமே துயரம் ஏன்? துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே! சோகம் பொல்லாதே! அலையும் காற்றினில் அகல் விளக்கேற்றி மறைப்பதில் பயனுண்டோ? கையால் மறைப்பதில் பயனுண்டோ? அதனால் (துணிந்த) பாயும் ஆற்றில் நீ வீழ்ந்த பின்னால் நீந்துவதால் பயனேது? சீறும் புயலும் மழையும் சேர்ந்தால் சின்னக்குடை தாங்காதே! (துணிந்த) காதல்தந்த துயர்தீரப் போதைக் கடலில் மூழ்கிடலானாய்! சாவது நிஜமே நீ ஏன் வீணாய் சஞ்சலப்பேய் வசம் ஆனாய்? (துணிந்த) - தேவதாஸ் வாழ்க்கை - நிலையில்லா ஒடம்! நீராடை யுடுத்த நிலமிதற்கே யுற்ற முறைமை நேற்றிருந்தவன் இன்றில்லை என்கிற பெருமை. நிலையில்லாத ஒட மடா புவி வாழ்க்கை நிலையில்லாத ஒட மடா உலக வாழ்க்கை நீர் மேலே குமிழி யடா மனித யாக்கை. 257