பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகம் - ஏழையின் நரகம் என்ன உலகமடா - இது ஏழைக்கே நரகமடா! தன்னலப் பேய்களுக்கே - இது தங்கச் சுரங்கமடா! (என்ன) தில்லு முல்லுகள் செய்து திருடும் குபேரனெல்லாம் அல்லல் படும் ஏழையைக் கள்ள னென்று ஏசுகிறார்: (என்ன) கட்டத் துணியு மின்றிக் கந்தல் பொறுக்கையிலே மொட்டைக் கதவு ஜன்னல் எல்லாம் பட்டாடை போர்த்துகின்றார்! (என்ன) வீடு கட்டும் பாட்டாளி வீதியிலே துங்குகின்றான் கூடியந்த மாடியிலே கும்மாளம் போடுகின்றார். (என்ன) பானையிலே கஞ்சி யின்றிப் பட்டினியா வாடுகின்றார்; வீணர்கள் தின்று மிஞ்சி வீதியிலே போடுகின்றார். (என்ன) ஏய்த்துப் பிழைப்பவர்க்கே - ஊரை ஏய்த்துப் பிழைப்பவர்க்கே - காலம் இது எல்லோர்க்கும் இல்லையடா! - ஓர் இரவு 259