பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லம்பு பட்ட துன்பம் மாறாது! தொகையறா 'யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' சுகமிழப்பர் என்ற வாகார்ந்த வள்ளுவன் வரம்பை யுணராது சாகாமல் சாகாதீர்! தாரணியோரே! பாடல் வில்லம்பு பட்டபுண் வேதனைதராது - என்றும் சொல்லம்பு சுட்ட துன்பம் மாறாது தெள்ளுதமிழ் ஏட்டிலுள்ள பாட்டினிலே - அவ்வை பாட்டினிலே - கண்டு நாம் நல்லவராய் வாழவேணும் நாட்டினிலே (வில்லம்பு) யோசனையில்லாமல் பேசாதே - முன்பின் (யோசனை) உனைமறந்தே உலகை ஏசாதே! ஆசையினால் சினம் அடையாதே - பகுத் தறிவையும் இழந்து உளறாதே! (வில்லம்பு) - மணமகள் நீதியில்லா உலகம்! பேதமற்ற காதலென்றும் பிரியமாகப் பேசுவார் பெருமையாகப் பேசுவார்; பெண்பிள்ளையைத் தவிக்க விட்டே ஓடுவார் சிலர் (பெல் நீதியில்லா உலகமிது நேர்மையற்ற உலகமிது ஜாதிபேத சமயங்களாம் சஞ்சலங்கள் சூழ்ந்த இந்த (உலக 260