பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருகால் மிருகங்கள்! நன்மையும் தீமையும் ரெண்டுங்கலந்தது நானில வாழ்க்கையடா - இதில் நல்லதெல்லாம் விட்டுத் தீமைக்குள் அகப்பட்டு நாசமாகாதீங்கடா - அட நாதாரிப் பசங்களா (நல்ல) உண்மையாக யாமுணர்ந்தது சொல்கின்றோம் உற்றதைக் கொள்ளுங்கடா - தேவை யற்றதைத்தள்ளுங்கடா - எண்ணும் எண்ணத்தில் மக்கள்தன்மையில்லாதவர் இருகால் மிருகமடா - உடல் உருவால் மனுசரடா - அட ஊதாரி உளங்கெட்ட பசங்களா (நல்ல) அருளென்றும் அன்டென்றும் ஆன்றோர் சொன்னது ஆண்டவன் பேரென்று சொல்லவோ? - அந்த ஆண்டவனைக் காணஅறிவு தேவை - கல்வி அதற்குத் தேவையான தல்லவோ? சிறுபோதிலே கற்றுத்தேர்ந்து கொள்ளவேணும் வயது முதிர்ந்தாலும் நுழையாது - செடி மரமானபின்னாலே கரணங்கள் போட்டாலும் வாட்டசாட்டமாக வளையாது! காலஞ் செய்கிறதைக் கடவுள் செய்யாதென்று கவனத்தில் வையுங்கடா - நெல்லைக் காற்று வந்தபோது தூற்றுவார்கள் போலே கருமத்தைச் செய்யுங்கடா, அட களிமண்ணுப் பசங்களா (நல்ல) த்திவேர்வை சிந்த ரத்தப் பாடுபட்டு நிலத்தைக் கிளறிவிட்டு உழைத்தார் - பெருஞ் 261