பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டேஞ்சரு ஐயா டேஞ்சரு: டேஞ்சரு அய்யா டேஞ்சரு வெரி வெரி டேஞ்சரு வெரி வெரி டேஞ்சரு உலகினில் மனிதர்கள் நடைமுறை தவறுதல் டேஞ்சரு, ஒஞ்சுபோன காலத்திலே உக்காந்து சாப்பிடவே உழைப்பாலே தேடிய பணத்தை ஊதாரிச் செலவுகள் செய்தால் டேஞ்சரு பட்டம் பதவிக்கே ஆசைப்பட்டால் துட்டுக்கே வரும் டேஞ்சரு பக்க மேளம் சரி யில்லாட்டி பாடகனுக்கே டேஞ்சரு, முட்டாப் பசங்களை யோசனை கேட்டா மூளைக்கே ரொம்ப டேஞ்சரு டேஞ்சரு அய்யா டேஞ்சரு! கண்ட பெண்களைத் தெருவில் பார்த்துக் கண்ணடிப்பது டேஞ்சரு! கரண்டுக் கம்பத்து மேலே ஏறிக் கம்பியைத் தொடுவது டேஞ்சரு! பெண்டு பிள்ளைகளை ஆசை கொண்டவன் சண்டைக்குப் போவது டேஞ்சரு பெரியோர் சபையில் சிறியோர் சென்று பேசப் போவது டேஞ்சரு! டேஞ்சரு அய்யா டேஞ்சரு! கல்லாதவர்கள் கலைஞ ரானால் கலைக்கு ரொம்ப டேஞ்சரு காப்பி அடிக்கிற பசங்க கிட்ட 263