பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதையைப் படிப்பது டேஞ்சரு இல்லாதவர் இருப்பவர் போல நடிப்பது மெத்த டெஞ்சரு! இருப்பவரும் இல்லாதவரை அவமதிப்பது இனிமேல் டேஞ்சரு டேஞ்சரு அய்யா டேஞ்சரு! காட்டையும் மேட்டையும் உழுகாமப் போனாக் கஞ்சிக்கு வருமே டேஞ்சரு கட்டுப் பாட்டுக்குள் அடங்காதவர்கள் கட்சியில் இருப்பது டேஞ்சரு ஒட்டுப் போடத் தெரியா விட்டால் நாட்டுக் கதனால் டேஞ்சரு உலகம் போற்றும் உத்தமரானால் உயிருக்கே ரொம்ப டேஞ்சரு! டேஞ்சரு அய்யா டேஞ்சரு தன்னல மற்ற தியாகிகளுக்குச் சர்க்கார் பதவி டேஞ்சரு சர்க்கார் பதவி கொண்டவனுக்கே தாட்சண்யத்தாலே டேஞ்சரு அண்ணன் தம்பியைப் பகைத்தவனுக்கு அடுத்தவராலே டேஞ்சரு அறிவில்லாதான் எவனோ அவனுக்கு அவனே வெரி வெரி டேஞ்சரு டேஞ்சரு அய்யா டேஞ்சரு உலகினில் மனிதர்கள் நடைமுறைத் தவறுகள் அவரவர்களுக்கே டேஞ்சரு: (டேஞ்சரு) - மாதர் குல மாணிக்கம் 264