பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு, மனிதர்கள் அறிவிலும் அதுபோ லுண்டு; உலகினில் அவரவர் திறமையும் கண்டு தொழிலது புரிவது மிக மிக நன்று உண்மையோடு உழைக்கோணும்! தானே தன்னன்னா மச்சான்! ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா! - மதுரை வீரன் தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்! தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்குச் சந்தர்ப்பம் சூழ்நிலை தாய்தந்தையாகும் - தன்னைத் (தானே) மானாபிமானந் தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும் - மேலும் வீணான யோசனைக்கே தன்னை இடமாக்கும் - பல விபரீதச்செயல்களை விளைவாக்கும் - தன்னைத் (தானே) ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே உள்ளத்தை ஒட விடும் - பின்னும் சேரும் இடம் வந்து சேராத ஒடமாய்த் திசைமாறச் செய்து விடும் - காதல் தன்னைத் (தானே) ஊரார் சொல் பொய்யதனைப் புகுத்திவிடும் - உண்மை உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் - மனம் மாறாத காதலர்க்குப் பகைமை மூட்டிவிடும் உரைப்பார் சொல் தவறெனவே விலக்கிவிடும் - மனம் ஞானோதயம் குறைந்தால் தொத்தும் ரோகம் நம்பிக்கை யற்றவர்க்கே துன்பமாகும். ஆணோடு பெண்ணிடமும் வரும் போகும் - அதற்கு ஒளஷதம் ஒன்றேதான் நல்விவேகம் - தன்னைத் (a - தெய்வ 267