பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கையில் கால்கள்! ஹை.... தத்தக்கா புத்தக்கா நாலு காலு தானே நடக்கையிலே ரெண்டு காலு எட்டுக்கால் கீழாக இரண்டு கால் மேலாக கொட்டு முழக்கோடு கும்பலுக்கு மத்தியிலே சட்டையைக் கழட்டி விட்டெறிஞ்சாப்பிலே மின்னாளே கண்ணாளே மண் மேலே (சட்டையை) இஷ்டப்படி நாம் இன்ப சுகங்களை அனுபவிக்கணும் போட்டுக்கோ தில்லாலே! தில்லாலே. தில்லாலே. தில்லாலே ஹை... தத்தக்கா புத்தக்கா நாலு காலு தானே நடக்கையிலே ரெண்டு காலு பேரின்பம் பெரிதென்று பெண்ணின்பம் சிறிதென்று பேசுதே வேதாந்தம் - பெருமை - பேசுதே வேதாந்தம் ரெண்டு பேரன்பிலொன்று சேரின்பம் மேலென்று தேறுதல் சித்தாந்தம் - நாமே - தேறுதல் சித்தாந்தம் உன்னைப் பின்பற்றுவேன் நானே! உம்மைப் பிரியாமல் இருப்பேனே! ரெண்டு பேரன்பிலொன்று சேரின்பம் மேலென்று தேறுதல் சித்தாந்தம் - நாமே - தேறுதல் சித்தாந்தம் கொடியும் கொம்பைச் சுத்தட்டுமா? சுத்தட்டு மே! குரலும் சுதியும் சேரட்டுமா? சேரட்டுமே! பெட்டையுஞ் சேவலும் கூடட்டுமா? கூடட்டுமே! பேச்சை நிறுத்திப் போடட்டுமா? ஆகட்டும். தத்தக்கா புத்தக்கா நாலு காலு - ஹை தானே நடக்கையிலே ரெண்டு காலு உச்சி வெளுத்தா முனு காலு ஊருக்குப் போகையிலே பத்துக் காலு. - கற்புக்கரசி 270