பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மனிதனாக! மனிதன் மனிதனாக இருக்கணும் மனிதர்ை மனிதனாக மதிக்கணும் புனிதமான வழியில் போற்றும் புகழுக் குடையவன் பஞ்ச பூதப் புணர்ச்சிப் படைப்பினிலே பிறப்பி லுயர்ந்தவன் வினையாலே அமையும் புதுமை விருப்பங் கொண்டவன் வேண்டுதல் வேண்டாமை என்ற விவரந் தெரிபவன் இனத்தைக் கண்டால் பகைத்துக் குலைக்கும் எச்சிலை பொறுக்கும் நாய்கள்! இயல் புடையான் குணத்திலல்ல உருவத்தில் மனிதன்! தனக் கமைந்த சுகத்தை மற்றோர் தான் கொள்ளப் பார்த்து ரசித்து சந்தோசப் படுபவனே தக்க மனிதன்! எளியாரிடம் சினங்காட்டும் புலியாய் விடக் கூடாது வலியாரிடம் பயத்தாலே எலியாய் விடக் கூடாது! தெளிவில்லாமல் ஊரு சுத்தும் கழுதையாகக் கூடாது. சேட்டையிலே வானரத்தைச் சேர்ந்து விடக் கூடாது. லஞ்சமதைக் குஞ்சரம் போல்நெஞ்சில் வைக்கக் கூடாது வாய்மொழியில் குடிகெடுக்கும் நஞ்சிருக்கக் கூடாது! அஞ்சுகின்ற தீமைக் கெல்லாம் அஞ்சாமை கூடாது அஞ்சாத நன்மைக் கெல்லாம் அஞ்சுவதும் கூடாது. 271 (மனிதன்) (மனிதன்) (மனிதன்) (மனிதன்) (மனிதன்)