பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னித் தமிழ்ச் சாலை ஓரம்: கன்னித் தமிழ்ச் சாலையோரம் - சோலையிலே கவிதைக் கனிகள் உண்ணும் பறவைகளே! தென்னவர் மூவேந்தராம் - தமிழ் வளர்த்த சேர சோழ பாண்டியரைப் பாடுங்களே! (கன்னி) மேருமலை மீதினிலே கொடி நாட்டினான் - சேரன் வீரங் காட்டிக் கனகவிசயர் தலை வாட்டினான் பாறாங் கல்லை உடைத்தெடுத்தான் பகைவனைச் சுமக்க வைத்தான்; பத்தினிப் பெண் சிலை சமைத்தான் கேளுங்களே! - அந்தப் பாடல் பெற்ற தேவி தன்னைப் பாடுங்களே! (கன்னி) சீறிவந்த புலியதனை முறத்தினாலே - அடித்துச் சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே! - இதை ஊரறிய உலகறிய உங்க ளாலே உண்மையான பெண்மை வாழப் பாடுங்களே! (கன்னி) - சொர்க்கவாசல் தமிழ் நாட்டின் பெருமை - ஒன்றல்ல. இரண்டல்ல! ஒன்றல்ல இரண்டல்ல தம்பி - சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்! (ஒன்) தென்றல் தரும்இனிய தேன்மண மும்கமழும் செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம் (ஒன்) பகைவென்ற திறம்பாடும் பரணிவகை - செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை - வான் புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் - செம் பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம் (ஒன்) முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி - வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - கவிச் சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி - இந்த வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு (ஒன்) - தாய்மகளுக்குக் கட்டிய தாலி