பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிய தமிழ் மாநிலம் வாழிய மாநிலம் வாழியவே - தமிழ் மாண்பெழில் நூன்முறை வாழியவே (வாழி) வளமது நீள்மக்க ளாட்சியுமே மதி வாணர்கள் மாட்சியுமே - அலை வாரிதி போல் உயர் வான்சுடர் போல் நீடுழி காலம் வாழியவே! (வாழி) - சொர்க்கவாசல் வண்ணத் தமிழ் சொன்ன கிளி: வண்ணத் தமிழ்ச் சொர்ணக் கிளி வாய் திறந்தாள்! வள்ளுவன் சொல் தெள்ளமுதை மெல்ல மொழிந்தாள்! (வண்ண) கன்னலொடு பாகு மலர்க் கள்ளை வெறுத்தேன் - அவள் கனிரசத் தேனை யுண்டு ஞானம் படைத்தேன் - இன்ப (வண்ண) மன்னும் செவிக்குன வில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் என வோதும் பொன்னெழுத் தேடுதனைப் புவிமீது கொண்ட கன்னியெழில் மாறாத கலைமாது - எங்கள் (வண்ண) குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர் என்றே அமிழ்தினும் இனியதொரு புகழ்சால் பொன்மொழியை வழங்கி வற்றாத வளம்பெற்றாள் - எங்கள் (வண்ண) - காவேரியின் கணவன்