பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தமிழ் மாநாடு வாழ்க! முத்தமிழ் மாநாடு வாழ்க மூதுரையால் பொது நீதியைப்பாடும் (முத்) இடை புத்தியில் மேம்படும் புலவர் கொண்டாடும் புத்தக வடிவினில் புதுமையை நாடும்! (முத்) தொங்கல் பகுத்தறிவுக் கொவ்வாத பஞ்சாங்கப் பாடைதனைப் பார்ப்பனர்கள் சரிபாதி பாய்ச்சி விட்டார்; மகமதியர் மத்தியிலே மண்ணாட்சி புரிய வந்து மறுபாதி தனிலுருதை வழங்க விட்டார்! பகைத்துவைத்துப் பாராண்ட பரங்கியர்கள் ஆங்கிலத்தைப் பதவிபெறும் படிப்பாகப் பரவ விட்டார்; மிகுந்துநின்ற தென்மொழியின் வேரறுக்க இந்தியது விருப்ப மென்றார். கட்டாய விளைவு காணிர் கமல் வந்ததும் போனதும் வாழ்வது தேடும் சந்தையு மானது தமிழ் நாடு; சிந்தையி னாலிதைத் தெளிந்து மேம்பாடு செய்திடக் கோவையில் தினமொன்று கூடும் (முத்) தொங்கல் கந்தன் வள்ளி கல்யாணக் காதல் பாட்டு: கண்ணன் பல கன்னியரைக் கலந்த பாட்டு; அந்திவண்ணன் சுடுகாட்டி லாடும் பாட்டு: அருத்தமற்ற சாமிகளுக் கனந்தம் பாட்டு! முந்தினவர் பாட்டிலுள்ள மொழியை மாற்றி முன்னேற்றத் தடையான மூடர் பாட்டால் செந்தமிழும் தென்னாடும் சிதைந்தி டாமல் சீர்திருத்தப் பாக்கள்பல திகழ்க நன்றே! மழையொடு பூமி உழவையும் தெய்வ மாண்பினும் மேலாய் மதி தோணும்; அழகொடு வள்ளுவன் அறநெறி யோர்ந்த அறிவுள ராலே வழிகாணும் இந்த (முத்) 10