பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிமேல் விழி வைத்தோர் நாடு: மொழி மேலே விழி வைத்தே முடிமன்ன ராண்ட தமிழ்நாடு - வட மொழி யான ஆரியத் தால் அழியாத கலை வாழும் தமிழ்நாடு! மழைதனை அன்போடு மகிழ்ந்து கொண்டாடும் உழுவோரால் உயர்வான வளநாடு புலியுடன் ஆடு இரை தேடும் புனலாடும் எழில்நீடும் புலவர்தம் நாடு: மானங்காத்த மறக்குடியார் சொந்த நாடு - தினம் மாற்றாரை வாழவைக்கும் அன்புநாடு - அபி மான மலையாளந் துளு கன்னடம் தெலுங்கு மரபோடு உறவாடும் தமிழ் நாடு! மேருமலை மீதினிலே விற்கொடி நாட்டிக் - கனக விசயர் தம்மை வென்ற சேரவீர நன்னாடு! சீர்பெருகும் சிலம்பணிந்த கண்ணகி பேரால் திருக்கோயில் சிலையமைத்த செந்தமிழ் நாடு: செந்தமிழ்நாடு நல்ல திருவிட நாடு எந்தையர்நாடு இதற் கேதினி ஈடு? நாட்டுக்கொரு நல்லதம்பி ஆழி நீங்கி வானின் மீது ஆதவன் எழுந்தான் காணிர், கோழி உல கெல்லாம் வாழ வென்று கூவி யழைக்குது கேளீர்! பார் முழுதும் ஏர்முனையிலே - உழவன் (மொழி) - வனசுந்தரி பாட்டினிலே கொண்டாட்டம் போடுது இந்தப் (பார்) 11 - நல்ல தம்பி