பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடு செழித்திட நாடு நாடு செழித்திடவும் உள்ளமே நாடு நல்லமழை பெய்யவும் நலமே தேடு! காடு கழனி எங்கும் கதிர்வளம் சூழ ... மாடு மனை தேடும்மக்கள் மனம்போல் வாழ... (நாடு) நீதி தவறாம லே அன்பாலே நேசமும் குறையா மல் நாமே ஜாதி மத பேதம் இல்லா மலே தன்னலம் எண்ணா மலே மேலாம் (நாடு) ஆணும் பெண்ணும் சமரசம் தான் ஆருயிர் உடல் போலவே எந்நாளும் காணரும் காதல் கலையுணர் வோடு காட்சியுடன் செல்வம் கருணை நீடும். (நாடு) தேசப்பணியே தெய்வப்பணி தேசப்பணியே மேலான தெய்வப்பணி யென்போம் சித்தம் கொண்டே ரத்தம் சிந்தும் யுத்தம் செய்குவோம். தேசம் காத்திடவே - வீரச் சேயர் பெற்றிடுவோம் தீங்கு தவிர்க்கும் தீரப்பாலை ஊட்டி வளர்த்திடுவோம். (தேசப்) சித்திரமும் வரைவோம் கைத் தொழில் வர்த்தகமும் புரிவோம் தேர் வேந்தர் போலும் திசைகள் பரவும் அரசும் சகல வகையிலும் உயர்வோம். (தேசப்) 15