பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காலமும் இந்தக் காலமும்! அன்னியர்கள் நமை யாண்ட தந்தக் காலம்; நம்மை நாமே ஆண்டு கொள்வ திந்தக் காலம்! பேசுதற்கும் உரிமை யற்ற தந்தக் காலம்; பிரச்சாரப் பெருமை யுற்ற திந்தக் காலம்! மனுசனை மனுசன் ஏச்சுப் பொழைச்சது அந்தக் காலம்; மடமை நீக்கிநம் உடமை கோருவது இந்தக் காலம்! ஆமா நெனைச்சதை எல்லாம் எழுதி வச்சது அந்தக் காலம் - எதையும் நேரில் பார்த்தே நிச்சயிப்பது இந்தக் காலம்! ஆமா மழைவரு மென்றே மந்திரம் செபிப்பது அந்தக் காலம்; - மழையைப் பொழிய வைக்கவே யந்திரம் வந்தது இந்தக் காலம் ஆமா இழிகுல மென்றே இனத்தை வெறுத்தது அந்தக் காலம்: - மக்களை இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவ திந்தக் காலம் ஆமா துரோபதை தன்னைத் துகிலுரிஞ்சது அந்தக் காலம் - பெண்ணைத் தொட்டுப் பாத்தாச் சுட்டுப் பிடுவான் இந்தக் காலம்! ஆமா 18 (மனுசனை) (மனுசனை) (மனுசனை) (மனுசனை) (மனுசனை)