பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாஸ்திரம் படிப்பது அந்தக் காலம் சரித்திரம் படிப்பது இந்தக் காலம்! கோத்திரம் பார்ப்பது அந்தக் காலம்! குணத்தைப் பார்ப்பது இந்தக் காலம் பக்தி முக்கியம் அந்தக் காலம் படிப்பு முக்கியம் இந்தக் காலம்! கத்தி தீட்டுவது அந்தக் காலம் புத்தி தீட்டுவது இந்தக் காலம்! பெண்ணைப் பேயெனப் பேசி அனைச்சது அந்தக் காலம் - பெண்ணைக் கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம்: ஆமா (மனுசனை) - நல்லதம்பி கவனிச்சுப் போடுங்கோ ஒட்டு: தேசபக்தர் போலே - போலி வேஷக்காரர் உண்டு - தனித் திறமைக் குறைவிலே - கூட்டணி சேர்ந்தவங் களுண்டு! காசுக் கொழுப்புகளுண்டு - சுய ஜாதித் திமிருகளுண்டு! கட்சிகள் மாறும் வெளவாலுண்டு காக்கா புடிக்கிற ஆட்களுமுண்டு! கவனிச்சுக் கோங்கோ முன்னாலே கஷ்டப்படாதீங்க பின்னாலே - அது தேர்தலுன்னா தெருத் தெருவாகத் தேடித் தேடி வருவாங்க தேவை முடிஞ்சா பொட்டி மக்களே தேடுனாக் கெடைக்க மாட்டாங்க! காருகள் வச்சி அழைப்பாங்க கண்ணால விருந்தும் வப்பாங்க! காரியத்துக்கு யாரானாலுங்க - உங்க காலெக் கூடப் புடிப்பாங்கோ (கவனிச்சுக்) 19