பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திர வாசல் திறந்தது! வாசல் திறந்ததுவே - சுதந்திர வாசல் திறந்ததுவே! வாசல் திறந்தது மக்கள் யாவருமே மன்னராக நல்ல வண்ணமாய் ... நுழையும் (வாசல்) ஆகம் ஆவி பொருள் தியாகத்தா லடிமை யகற்றவந்த காங்கிரஸ் கட்சிக்கும் - சட்டம் அறிந்த மேலவர்கள் ஆங்கிலப் பெயரில் அமைத்துக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சிக்கும் - பேச்சில் பாகிஸ்தானம் பெற்ற லீக்குக்கும் - தாழ்த்தப் பட்ட பேர்கள் கட்சி நோக்குக்கும் - மதப் பாசஞ் சார்ந்த இந்து மாசபைப் போக்குக்கும் பதவி வாக்குரிமை பொதுவில் வாய்க்கும் வழி (வாசல்) பழைய காங்கிரஸ் வாதிகிழவர் திராவிடத்தின் பகுத்தறிவுத் தந்தை தெளிவுக்கும் - அவர் பக்கம் நின்று பணியாற்றும் தொண்டன் மெத்தப் படித்த மேதையின் சொற் பொழிவுக்கும் - மேல் முளைக்கின்ற கட்சிகள் பலவுக்கும் - சர்வ மொழிகளாய்க் கலைகள் முழுமைக்கும் - மிகத் தொன்மையான நல்ல உழவுக்கும் - புதுப் புதுமையாய் வளரும் தொழிலுக்கும் - வழி (வாசல்) பாடுபட்டுப் பிழைக்கணும் நாடு செழிக்க வேணும் ஆமடி தங்கம்: நாகரீகமாக வேணும் ஆமா சொல்லு. (நாடு) பாடுபட்டுப் பிழைக்க வேணும் ஆமடி தங்கம், பசியாற உண்ண வேணும் ஆமா சொல்லு. (நாடு) - நல்ல தம்பி 20