பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இல்லாத வாணிபம் நாட்டுக்காகப்பல நன்மைசெய்வமென்று கூட்டம் போட்டுப் பேசி நடிச்சுக்கோ - மக்கள் ஒட்டைக் கொண்டு பெறும் எம்.எல்.ஏ. பதவி சீட்டைச் சமத்தாகப் பிடிச்சுக்கோ - பண வேட்டையாடத் தொழில் பர்மிட்டு லைசன்சு வேண்டும்பேர்க்கு வாங்கிக் கொடுத்துக்கோ - அதில் கூட்டுச் சேர்ந்து நம்ம சொந்தக்காரர் பேரில் கொழுத்த செல்வக்கொள்ளை அடிச்சுக்கோ - கை முதலில்லாத பெரும் வியாபாரம் - ஜனங்க முட்டாள்தனம் இதற்கு ஆதாரம் - முன்னே நடந்தகால மெல்லாம் தியாகத்திலே - இப்ப நடக்குங்காலம் நம்ம யோகத்திலே காத்து வந்தபோது துத்திக்கோ - நிகழ் காலங்கண்டு கோலம் மாத்திக்கோ. பாராளும் பதவிக்கு நீ - காசு பணந்தேட உதவிக்கு நான். பொருளைத் தேடி வைத்துப் பொட்டியிலே பூட்டு - எந்தன் பொன்மொழி கேட்டு. (பொ) கலைகள் யாவும் வளர்த்த நாடு: கலை முதலாகத் தொழில் முறையாவும் காத்து வளர்ப்பது தமிழ் நாடே முதல் முதலாக நல்லவை யாவும் முயன்று முடிப்பதும் தமிழ் நாடே (கலை) பாட்டால் உணர்ச்சி யூட்டும் - கவி பாரதி சேர் தமிழ் நாடு நாட்டு மக்கள் முன்னேற்றம் தனை நாடியே கவிதை பாடி வைத்ததமிழ்க் (கலை) - நல்லதம்பி 22