பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சத் துணிவால் நேர்மையற்று நேசம் அழியா அந்நியரை வஞ்சித் தொழுகும் கொடியவர்கள் மதங்கொண் டடித்து வதைத்தாலும், கிஞ்சித் தேனும் கேடெண்ணாக் கேண்மை உடையார் காந்தி மகான் செஞ்சொல் அமுத அன்பினிலே சேர வாரும் உலகீரே! அனைத்தும் அடைந்து வாழ்வதற்காய் அயலார் உடைமை கவர்வதெல்லாம் நினைக்கும் நினைப்பில் தோன்றாமல் நிதமும் வாழ்வின் தேவைகளை மனத்தில் திருத்திக் குறைந்தமைந்து வாழும் வாழ்வே வாழ்வென்று பணித்த காந்தி நெறியன்பைப் பற்ற வாரும் உலகீரே! கானம் உறைந்து சருகுண்டு காயம் உலரக் கண்மூடி மோனத் தமர்ந்தே தவம்செய்யும் முயற்சி வீணாம்; அவரவர்தம் தானத் தமைந்து செய்கடனே தகைமை என்றே சான்றளித்த ஞான குருவின் அன்புநெறி நாட வாரும் உலகீரே! சூழ்ந்த சுற்றம் கல்விசெல்வம் சுகிர்த வாழ்வு காரணமாய் ஆழ்ந்த செருக்கை அழித்தொழிக்கும் அருளை அணியாய் அணிந்துலகில் தாழ்ந்த சிந்தை உடையவராய்த் தயங்காது அன்பின் நெறிசார்ந்து வாழ்ந்த கருணை காந்தியெம்மான் வழியில் புகுமின் உலகீரே! 29