பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியின் அன்பு கோலமாய் விளங்கிய கோதிலா வாழ்க்கைச் சீலமே காந்தியின் சீர்மிகும் அன்பே, காலமாம் தருவிலே காதலாய் மலர்ந்து ஞாலமீது இன்பமே நல்கிடும் அன்பே, நலங்கெட நாள்தோறும் நாட்டிய சூழ்ச்சிக் குலங்கெடக் கொதித்தெழும் கோதிலா அன்பே, விலங்கினை ஒத்தவர் வெகுளுதல் கண்டால் கலங்கிடா திருப்பது காந்தியின் அன்பே, அறத்தினைச் சிறையிலே அடைத்து வைப்பவர்தம் மறத்தினைத் திருத்திடும் மாண்புயர் அன்பே. வெறுத்திடும் வேற்றுமை விளைத்தெழும் மனத்தைக் கரைத்திடும் கருணையாம் காந்தியின் அன்பே. படிந்தடி பணிந்திடப் பசி மிகும் ஏழை படுந்துயர் கண்டுளம் பதைத்திடும் அன்பே, 30